Wednesday, February 18, 2009

நபிமொழி

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''காற்று அல்லாஹ்வின் கருணையில் உள்ளதாகும். அது நல்லதையும் தரும். (சில சமயம்) வேதனையையும் தரும். அதை (காற்று வீசுவதை) நீங்கள் கண்டால் அதை ஏசாதீர்கள். அல்லாஹ்விடம் அதில் நல்லதைக் கேளுங்கள். அதன் தீயதிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுங்கள்'' என்று நபி(ஸல்) கூறக் கேட்டேன். (அபூதாவூது) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''காற்று வீசினால், ''அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்க ஃகய்ரஹா வஃகய்ரமா ஃபீஹா, வஃகய்ர மா உர்ஸிலத் பிஹி, வஊது பிக மின் ஷர்ரிஹா, வஷர்ரி மா ஃபீஹா, வஷர்ர மா உர்ஸிலத் பிஹி'' என்று நபி(ஸல்) கூறுவார்கள். (முஸ்லிம்)
பொருள் : இறைவா! இதில் நல்லதையும், இதில் ஏற்படும் நல்லதையும், இது அனுப்பட்டதின் நல்லதையும் உன்னிடம் நான் கேட்கிறேன். மேலும் இதில் தீயதையும், இதில் ஏற்படும் தீயதையும், இது அனுப்பப்பட்டதின் தீயதையும் விட்டும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன். (ரியாளுஸ்ஸாலிஹீன்)
இப்னு உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''காபிரே!'' என ஒருவர் தன் சகோதரனைக் கூறினால், இது அவர்களில் ஒருவரிடம் வந்து சேரும். இவர் கூறியது போல் அவர் இருந்தால் (அவரிடம் போய் சேரும்). இல்லையென்றால், கூறியவரிடமே திரும்பி விடும்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
அபூதர் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''காபிர் என ஒருவரை அழைத்தால், அல்லது 'அல்லாஹ்வின் பகைவரே! என்று கூறினால், (கூறப்பட்டவர் அவ்வாறு இல்லை எனில்) கூறியவரிடமே அது திரும்பாமல் இருப்பதில்லை'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன். (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
இப்னு மஸ்ஊத் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''குத்திக் காட்டுபவனாக, சபிப்பவனாக, கெட்ட வார்த்தை பேசுபவனாக, தீய சொல் கூறுபவனாக ஒரு மூஃமின் இருக்கமாட்டான்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''ஒரு விஷயத்தில் கெட்டபேச்சு இருப்பின், அது அச்செயலை கெடுக்காமல் இருப்பதில்லை. மேலும் ஒரு விஷயத்தில் வெட்கம் கொள்வது இருப்பின், அதை அது மெருகூட்டாமல் இருப்பதில்லை'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்)

No comments: