
இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''உங்களில் ஒருவர், ஒரு அந்நியப் பெண்ணிடம் (அவளுடன்) அவளுடைய (தந்தை, சகோதரர், மகன் போன்ற) உறவினர்கள் உடன் இல்லாமல் தனித்திருக்க வேண்டாம்'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.(புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
இப்னு உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''உங்களில் ஒருவர் தனது இடது கையால் சாப்பிடவேண்டாம். குடிக்க வேண்டாம். நிச்சயமாக ஷைத்தான்தான், தனது இடது கையால் சாப்பிடுவான். குடிப்பான் ''. என்று நபி(ஸல்) கூறினார்கள்.(முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''ஒருவர் ஒரு செருப்பில் நடக்க வேண்டாம். இரண்டையும் சேர்த்தே அணியட்டும்! அல்லது இரண்டையும் சேர்த்தே கழட்டி விடட்டும் என்று நபி(ஸல்) கூறினார்கள்.(புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
இப்னு உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''ஒருவரின் செருப்பு வார் அறுந்துவிட்டால், அதை சரி செய்யும்வரை, ஒரு செருப்புடன் நடக்க வேண்டாம்'' என்று நபி (ஸல்) கூற நான் கேட்டேன். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
No comments:
Post a Comment