Saturday, February 21, 2009

நபிமொழி

இப்னு உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''வேட்டைக்காக அல்லது கால்நடை பாதுகாப்பிற்காக தவிர நாயை ஒருவர் வளர்த்தால், ஒவ்வொரு நாளும் அவரது கூலியில் இரண்டு 'கீராத்' குறைந்துவிடும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன். மற்றொரு அறிவிப்பில் ''ஒரு கீராத்'' என்று உள்ளது. குறிப்பு: ஒரு 'கீராத்' என்பது, ஒரு மலையளவு நன்மையாகும். (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''நாயையும், சலங்கையையும் வைத்துள்ள பயணத்தில் மலக்குகள் தோழமை கொள்ள மாட்டார்கள். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
ஜாபிர் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''வெங்காயம் அல்லது பூண்டை ஒருவர் சாப்பிட்டால், நம்மிடம் அவர் விலகி இருக்கட்டும். அல்லது நம் பள்ளிவாசலை விட்டும் விலகி இருக்கட்டும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில் (கீழ்கண்டவாறு) உள்ளது. ''வெங்காயம், பூண்டு ஆகியவற்றை ஒருவர் சாப்பிட்டால் நம் பள்ளிவாசலை அவர் நெருங்க வேண்டாம். நிச்சயமாக (துர்வாடையால்) வானவர்கள், மனிதர்கள் நோவினை பெறுவது போல் நோவினை பெறுகின்றார்கள்.'' (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
இப்னு உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''உங்கள் பெற்றோர்களின் பெயரால் நீங்கள் சத்தியம் செய்திட, அல்லாஹ் உங்களுக்கு தடை செய்து விட்டான். ஒருவர் சத்தியம் செய்தால், அல்லாஹ்வின் பெயரால் சத்தியம் செய்யட்டும்! அல்லது மவுனமாக இருக்கட்டும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
இப்னு மஸ்ஊத் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''நியாயமின்றி ஒரு முஸ்லிமின் சொத்தை அபகரிக்க, ஒருவர் சத்தியம் செய்தால், அவர் மீது கோபம் உள்ள நிலையில் அவர் அல்லாஹ்வை சந்திப்பார்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்பு அல்லாஹ்வின் வேதத்திலிருந்து இதற்குச் சான்றாக எங்களிடம் நபி(ஸல்) அவர்கள் (பின்வரும்) வசனத்தை ஓதினார்கள். ''நிச்சயமாக அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கும், தங்களின் சத்தியங்களுக்கும் பதிலாக (உலகில்) அற்பப் பொருளை வாங்குகின்றவர்களுக்கு மறுமையில் எவ்வித பங்கும் கிடையாது. மேலும் அவர்களிடம் அல்லாஹ் பேசவும் மாட்டான். மறுமை நாளில் அவர்களைப் பார்க்கவும் மாட்டான். (பாவங்களை விட்டும்) அவர்களைப் பரிசுத்தப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்கு நோவினை தரும் வேதனை உண்டு. (அல்குர்ஆன் : 3:77) (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)

No comments: