
அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''ஒருவர் ஜும்ஆ நாளில் மட்டும் நோன்பு வைக்க வேண்டாம். ஆனால் அதற்கு முன் அல்லது அதற்கு பின் ஒரு நாள் (நோன்பு வைத்தாலே) தவிர'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்).
ஜாபிர் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''கப்ரு பூசப்படுவதையும், அதன் மீது உட்காருவதற்கும், அதில் கட்டிடம் கட்டுவதற்கும் நபி (ஸல்) தடை செய்தார்கள்". (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்).
அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''சாபத்தைத் தரும் இரண்டு காரியங்களைப் பயப்படுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ''சாபத்தை ஏற்படுத்தும் அந்த இரண்டு எது?'' என்று மக்கள் கேட்டனர். ''மக்கள் நடக்கும் பாதையில் மல – ஜலம் கழித்தல் மற்றும் மக்களுக்கு நிழல் தரும் மரத்தின் கீழ் மல – ஜலம் கழித்தல்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
ஜாபிர் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''தேங்கிக் கிடக்கும் தண்ணீர் (குளத்தில்) சிறுநீர் கழிக்கப்படுவதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்).
No comments:
Post a Comment