Monday, April 28, 2008

அவர்கள் செய்த குற்றம்தான் என்ன?

மனிதாபிமாத்தின் சின்னங்களே!
இன்று இரவு பத்து மணி பி.பி.சி செய்தி பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் வலமை போல் பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேலியர்கள் நடாத்தும் இன வெறியாட்டம் பற்றிய செய்தியும் இருந்தது. அதில் தங்களது வீட்டில் சந்தோஷமாக தனது மக்களுடன் உணவருந்திக் கொண்டிருந்த போது செல் விழுந்ததில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த தாயும் தனது நான்கு சிறு குழந்தைகளும் அநியாயமாக கொள்ளப்பட்டனர். என்ற செய்தி எப்போதும் போல் பல கேள்விகளை மீண்டும் என் கன்னத்தில் அறைந்து கொண்டிருந்தன.

இந்த பயங்கரவாத வெறியாட்டத்தில் தினம் தினம் பாலஸ்தீன அப்பாவி மக்களின் உயிர்கள் பறிதாபமாகப் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நீதியற்ற நீதிமன்றத்தல் உள்ள நீதி தேவதையின் கண்கள்தான் கருப்புத் துணியால் கட்டப்பட்டுளன. ஆனால் உலகத்தாரின் கண்களை கருப்புத் துணியால் கட்டப்பட்டது எப்போது? எனக்குத் தெறியவில்லை.
மனிதத்திற்கு நடந்ததென்ன? இக்கேள்வியை யாரிடம் முன்வைப்பது? என்பதை இன்றுவரை சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்! இதற்கான பதிலை எப்போது என்னால் காண முடியும்? இது என்னைப் போல எத்தனையோ உள்ளங்களின் தேடல்.

அவர்கள் செய்த குற்றம்தான் என்ன? தயவுசெய்து யாராவது எனக்கு கூறுவீர்களா? ஏனிந்த கொடுமை? ஏன்? ஏதற்காக? மனிதர்களைக் கொன்றுவிட்டு எதை புதிதாய் படைக்கப் பார்க்கிறார்கள்?!

உங்களுக்கும் மனிதாபிமானம் கொஞ்சமேனும் இருந்தால் அவர்களின் நீதிக்காக, நிம்மதிக்காக சற்று சிந்தியுங்களேன்!ஒவ்வொருவரும் உருப்படியாக சிந்தித்தால் ஒரு நாள் பதில் கிடைக்கும். அதுவரைக்கும் காத்திருக்கிறேன்.
- ஆக்கம்: நிர்வாகி

No comments: