அல்-குஆனும் அறிவியல் விஞ்ஞானமும்
(முஹம்மதாகிய) அடியாருக்கு நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு, (அதில்) நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஒரு அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள். அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்.உங்களால் (இதைச்) செய்யவே முடியாது. நீங்கள் செய்யாவிட்டால் (நரக) நெருப்புக்கு அஞ்சுங்கள்! நிராகரிப்பாளர்களும், கற்களுமே அதன் எரிபொருட்களாகும். (ஏக இறைவனை) மறுப்போருக்காகவே அது தயாரிக்கப்பட்டுள்ளது.' – 2:23-24.
இஸ்லாத்தில் பழமைகள்தானே ஊஞ்சலாடுகின்றன, அல்குர்ஆன் அறிவியல் பற்றிப் பேசுகின்றதா? என்ற சந்தேகங்கள் நம்மில் சிலருக்கும் முஸ்லிமல்லாதோர்களில் பலருக்கும் எழலாம். உண்மையில் இஸ்லாம் ஓர் அறிவு பூர்வமான மார்க்கமாகும். அதேபோன்று அல்குர்ஆனும், நபிமொழிகளும் உறைக்கும் அறிவியல் உண்மைகள் மற்றும் கருத்துக்கள் விஞ்ஞானத்தையே மிஞ்சி விடுவதையும் நடுநிலை ஆராய்ச்சியாளர்கள் காணத்தான் செய்கிறார்கள்.உண்மையில் உலகிலுள்ள மதங்களில் இஸ்லாம் எல்லாவற்றுக்கும் மேலே உயர்ந்து நிற்கின்றது. அதில் அல்குர்ஆன் பேசும் அறிவியல் காலத்துக்கு முந்தியவை. அது இறைவேதம் என்பதை பறைசாட்டுகின்றது.
1642 ல் பிறந்த ஐசக் நியூட்டன் என்ற விஞ்ஞானியே பிற்காலத்தில் உலகில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்திய அறிவியல் கோட்பாடுகளுக்கு அடித்தளமிட்டவர் என மேற்கத்திய வரலாறு கூறுகின்றது. ஆனால் இற்றைக்கு 1400 வருடங்களுக்கு முன்பே அறிவியல் விஞ்ஞானத்திற்கு அல்குர்ஆன் ஆக்கபூர்வமான உதாரணங்களைக் கூறியிருந்தும் அந்த மேற்கத்தேயம் அவைகளைக் கண்டுகொள்ளவே இல்லை!
அல்-குர்ஆன் கூறும் விஞ்ஞான அறிவியல் உண்மைகளை நாம் அறிந்து கொள்கின்ற போது எமது ஈமான் மென்மேலும் வலுவடையும் என்பதில் சந்தேகமில்லை. அல்-குர்ஆன் மனித வாழ்க்கைக்கு ஒரு வழிகாட்டியாக அருளப்பட்ட வேதம் என்பதை உலக முஸ்லீம்கள் அனைவரும் ஏற்றுக் கொண்ட ஒரு விடயமாகும். அதனால்தான் தமது ஆத்மீக விடயங்களுக்காக அல்-குர்ஆனையும், அண்ணலாரின் வாக்குகளையும் நாடிச் செல்கின்றோம். ஆனால், உலக முன்னேற்றத்திற்கான, அறிவியல் புறட்சிக்கான விடயங்களை அல்-குர்ஆன் தன்னகத்தே கொண்டுள்ளதை நாம் கண்டுகொள்ளவதில்லை.
அல்-குர்ஆன் விஞ்ஞானத்தை அலசுவது போன்று உலகில் எந்த வேதநூலும் நவீன விஞ்ஞானம் பற்றி பேசியது கிடையாது. போதாமைக்கு விஞ்ஞானத்திற்கு முறணான போதனைகளைத் தான் நாம் காணமுடிகின்றது.
அல்-குர்ஆன் விஞ்ஞானத்தை அலசுவது போன்று உலகில் எந்த வேதநூலும் நவீன விஞ்ஞானம் பற்றி பேசியது கிடையாது. போதாமைக்கு விஞ்ஞானத்திற்கு முறணான போதனைகளைத் தான் நாம் காணமுடிகின்றது.
அதேநேரம் அல்-குர்ஆன் ஒரு விஞ்ஞான நூல் அல்ல என்பதும் கவணிக்கத்தக்கது.
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
No comments:
Post a Comment