Sunday, April 20, 2008

உஷார்! உஷார்!!

வல்லோனின் திருநாமம் போற்றி

ஊடகத் துறை வளர்ச்சியடைந்து உலகை பல்வேறு நிறங்களில் கோடுகிழித்துக் கொண்டிருக்கின்றது. இக்காலகட்டத்தில் நாம் கால ஓட்டத்தின் சருகுகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஊடகத் தகவல்களை மட்டும் நம்பி வாழும் மனிதர்களாக நாம் ஆக்கப்பட்டிருக்கிறோம் என்பதைக் கூட யாரும் மறுக்க முடியாது.

விரும்பியோ விரும்பாமலோ மனிதன் ஊடகங்களுக்கு அடிமைதான். ஏனன்றால் உலக நடப்புக்களை அறியத் துடிக்கும் அவன் தாகத்திற்கு சிறந்த தகவல் திறட்டியாக அவைகள் தான் திகழ்கின்றன. உருண்டு செல்லும் உலக உருண்டையின் மூலை முடுக்குகளில் எல்லாம் என்னதான் நடக்கின்றது என்பதனை எமது வீட்டின் அறைக்குள் கொண்டுவந்து தந்து கொண்டிருக்கும் மாபெரும் செயலை இந்த ஊடகங்கள்தான் தவறாது செய்து கொண்டிருக்கின்றன.

இந்த நவீன உலகில் இப்படிப்பட்ட தகவல் தொலைத் தொடர்பு சாதனங்கள் இல்லையென்றால், நாம் இன்னும் இருட்டுக்குள்தான் இருந்து கொண்டிருப்போம். இப்படி நற்தொண்டாற்றிக் கொண்டிருக்கும் அதேநேரம் சில மன்னிக்க முடியா மாபாதக குற்றங்களையும் நடாத்திவருகின்றன:

1. ஒழுக்க வீழ்ச்சியின் பக்கம் மனித சமூகத்தை கூவி அழைக்கின்றது.

2. பெண்களை வெரும் ஆபாசப் பொருளாகவும், போகப் பொருளாகவும் அறிமுகப்படுத்ததல்.

3. ஆதிக்க சக்திகளுக்கு துணை போவது மட்டுமல்லாமல் அவர்களது வளர்ச்சிக்கு ஊக்கமலித்தல்.

4. முஸ்லிம் சமூகத்தை மோசமானவர்களாக, பயங்கர வாதிகளாகச் சித்தரித்தல்.

5. இஸ்லாத்தில் பற்றற்ற ஒரு முஸ்லிம் ஏதாவது தவறிழைத்தாலும் அவனை பயங்கரவாதத்தோடும், இஸ்லாத்தோடும் தொடர்பு படுத்தல்.

6. சம்பந்தமில்லா விடயங்களோடு முஸ்லிம்களை தொடர்பு படுத்துதல்.

7. இஸ்லாத்தை தாறு மாறாக விமர்சித்தல்.

8. ஒரு பக்கச் சார்பாக நடந்து கொள்ளல்.

9. முஸ்லிம்களது ஆக்கங்களை அறிமுகப்படுத்துவதில் தாமதம் கொள்ளலும் இஸ்லாத்தின் எதிரிகளின் வாதங்களை விரைவு படுத்தலும்.

10. முஸ்லிம் சமூகத்தின் எங்காவது ஒரு மூலையில் தவறாக ஒரு நிகழ்வு நடந்தாலும் அதை பூதாகரப்படுத்தி அம்பலமாக்குதல்.

11. உலகுக்கு நன்மை செய்யும் நோக்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தருனத்தில் தீமைகளைக் கண்டிக்காமல் மெளனமாகுதல்.

12. மேற்கத்தேய அட்டூழியங்களை நீதிக் கண்ணோட்டத்தில் அனுகாமை.

இப்படி ஊடக வன்முறைகள் தொடர்வது உண்மையில் கண்டிக்கத்தக்கதாகும். நாட்டு நடப்புக்களோடு கலக்காத மனிதர்களும், குறிப்பாக வீட்டிலேயே தங்கிவாழும் பெண்கள் மற்றும் வயோதிபர்கள் இந்த தகவல் ஊடகங்களை மட்டுமே தங்கி வாழ்கின்றனர். இப்படிப்பட்ட இத்தருனத்தில் அவர்களது எதிர்பார்ப்புக்கள் வீணடிக்கப்படுகின்றன. எதை நம்புவது எதை நம்பக் கூடாது என்ற முடிவுக்கு வருவதில் கடும் சிறமப்படுகின்றனர். எனவே இவர்களது தாகத்தையும், முஸ்லிம்களது எதிர்காலத்தையும் கவணத்திற் கொண்டு ஒவ்வொரு முஸ்லிமும் தமக்கு முடியுமான பங்களிப்பை நல்க கடமைப்பட்டிருக்கின்றனர்.

குறிப்பாக எம் சமூகத்தில் இருக்கம் ஆக்கத்திறன் கொண்டவர்கள், படைப்பாளிகள், ஊடக ஆர்வலர்கள், சமூக மேம்பாட்டுக்காக பாடுபடுபவர்கள் திட்டமிட்ட அடிப்படையில் இயங்க வேண்டும். இப்படி சமூக நலனுக்காகப் பாடுபடுபவர்களுக்கு தனவந்தர்கள் மூலதன உதவி நல்கி அவர்களது ஆக்கங்களை ஊக்குவிக்க வேண்டும்.

அதேபோல் இஸ்லாமியப் பற்றுள்ள அதிகமான ஊடகவியலாலர்களை உருவாக்குதல், ஊடகத்துறைகளை வளர்த்தல், வலைத் தளங்களை நிருவுதல் மற்றும் அதிகமாக ஆக்கங்களை தொடர்ந்தும் எழுதிக் கொண்டே இருக்க வேண்டும். ஏனன்றால் தற்கால உலகானது சிந்தனா ரீதியான போராட்டத்தைத் துவங்கியுள்ளது. இதனை பேனா முனை கொண்டு மட்டுமே முறியடிக்க முடியும் என்பதை கவணத்திற் கொண்டு வரவேண்டும். வல்ல அல்லாஹ் நம் சமூகத்தை விடியலை நோக்கி நகர்த்துவானாக!

- ஆக்கம்: நிர்வாகி

No comments: