
இறைவனின் அழைப்புக்கு
இனிதே சிரம் சாய்த்த
உங்களைக் காணுகையில்
சந்தோஷமாய் உணருகிறேன்.
வாருங்கள் உங்கள் சொந்த இடம் சேர
வாருங்கள் புண்ணியத்தின் கொடைகளை
பூக்கொத்துக்களாய் கொய்து வாருங்கள்.
ஹஜ் செய்தவன்
கண்டுவரும் பாடங்கள் தான்
அவன் - கொண்டுவரும்
எதிர்கால வாழ்க்கையின் ஓடங்கள்!
சடவாத உலகத்தில்
சலைக்காமல் நடை போட்டவர்கள் நாங்கள்
அதனால்தான் - உலக நடப்புக்கள்
நம் நாளிகைகளை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன!
ஹஜ்ஜூக்குப் பின் காத்துக் கிடக்கின்றது
சாத்தானின் சாகசங்கள்!!
சருக்கினால் போதும் வீழ்வது சாக்கடைதான்!
ஹஜ்ஜூக்கு முந்திய காலங்கள்
நீ – கடந்துவந்த கருப்பு நாட்களாகும்.
உன் அனாச்சாரங்கள் ஊமையாய் உறங்குகின்றன
மீண்டும் உணர்வூட்டி உசுப்பிவிடாதே!
வேண்டாத புதினங்களை
விலைக்குவாங்கும் காலத்தை மீண்டும்
உன் விடிந்த வாழ்க்கைக்குள் கலந்து விடாதே
ஒவ்வொரு நாளும் வெள்ளையாய் விடியட்டும்.
சகோதரா!
சந்தோஷ வாழ்க்கையில் சங்கமமாகு
சந்தோஷத்தின் வாடையை நிஜமாய் உணர்வாய்!
வேறுபாடுகளை வேறோடு களைய
வெல்லோட்டம் காணும் தத்ரூபக் காட்சி!!
மாற்றானின் மண்டையை
மறக்கவைக்கும் மங்களகரமான காட்சி!
சாதி வேண்டாம்
சச்சரவும் வேண்டாம்
சாத்தானிய சந்தையிலே சங்கமித்த
சர்வாதிகார சிந்தனையும் வேண்டாம்
உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி
உருவாதல் சாத்தியமோ?
ஊருலகம் போற்றும் வண்ணம்
ஹஜ்ஜில் கண்டோம் ஒற்றுமையை!
- ஆக்கம்: நிர்வாகி
No comments:
Post a Comment