என் வாழ்க்கையே ஒரு கோடை காலம்!
வசந்தம் தேடி சவுதி வந்தேன்
வரண்ட கோடை எனைத் துறத்திற்று!
ஆறுதல் தேடி பக்கம் சென்றால்
அரேபியர் பார்வை அணல் மூட்டிற்று!
பாலை வனத்தில் குடிப்பதற்கே தண்ணீரில்லை!
ஆனால் - அடிக்கடி நான் குளித்துக் கொள்வேன்!
வியர்வையே! பாலைவனமெங்கும் நீ வாழ்க!
கானல் நீரையே கண்டு பழகியதால்
என் வாழ்க்கையே இருண்ட பாலைவனம்!
பாலைவனச் சோலைகளுக்காய்
பந்தாடும் வாழ்க்கையாய் - என்
வாழ்க்கை உருளுகின்றது.
பாலைவனத்திலும் மிருகங்களுக்கு
பசியகற்றும் இறைவன் - என்
வாழ்க்கையின் வசந்தத்திற்கும்
வழிசெய்வான் என்ற எதிர்பார்ப்போடு
நடக்கிறேன் நாளையை நோக்கி..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment