
வெள்ளை நிற கிளி இனப் பறவையொன்று எட்ட முடியாத தூரத்திலுள்ள உணவை எடுக்க குச்சிகளைப் பயன்படுத்தி விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
வியன்னா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதி அலைஸ் அயுர்ஸ்பேர்க் தலைமையிலான குழுவினர் அண்மையில் வியன்னாவில் பிடிக்கப்பட்ட பிகாரோ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள இப்பறவையை ஆய்வுக்குட்படுத்தியபோது அந்தப் பறவை தனது கூண்டுக்கு வெளியேயுள்ள உணவை எடுக்க மதிநுட்பத்துடன் குச்சியொன்றைப் பயன்படுத்தியுள்ளது.
இந்தப் பறவையினம் வழமையாக இந்தோனேசியாவிலேயே வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment