Wednesday, November 7, 2012

டெங்கி! சில தகவல்கள்.. சில தீர்வுகள்..!!உலகின் பல நாடுகளில் 200 ஆண்டுகளாக வலம் வந்து கொண்டிருக்கும் கொடிய தொற்று நோயே டெங்கி (அ) டெங்கு (Dengue - ˈdɛŋɡi (UK)) காய்ச்சல். கடந்த 30 ஆண்டுகளில் இதன் தாக்குதல் (EPIDEMICS) அதிகரித்துள்ளது. உலகம் முழுதும் சுமார் 2500 மில்லியன் மக்கள் டெங்கி கொள்ளை காய்ச்சல் பாதிப்பு வளையத்திற்குள் வாழுகின்றனர். ஆண்டுக்கு 50 மில்லியன் மக்களை டெங்கி தாக்குகிறது. 
 
File:Dengue fever symptoms.svg


டெங்கி 1, 2, 3, 4 என 4 வகை வைரஸ்களால் ஏற்படும் காய்ச்சல் இது. ‘எடியஸ் எஜிப்டி’ வகைக் கொசுக்களால் இது பரவுகிறது. கொசு கடித்த 5, 6 நாட்களில் காய்ச்சல் வருகிறது.
இக் கொசுக்கள் தேங்கியுள்ள மழைநீரில், நன்னீரில் இனப்பெருக்கம் செய்யும். சூரிய உதயத்திலிருந்தது 2 மணி நேரமும் சூரியன் மறையும் மாலையில் 2 மணி நேரமும் இவை கடிக்கும்.

தண்ணீர் தேங்க விடாதீர்கள்!
முன்பெல்லாம் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெருகிய ஏடியஸ் கொசுக்கள் இப்போது கோடை மழைக் காலச் சூழலிலும் பெருகி வருகின்றன. ஒவ்வொரு வீட்டைச் சுற்றியும் தண்ணீர் தேங்காமல் தடுப்பது அவசியம். ஜக்குகள், வாளிகள், பூந்தொட்டிகள், நீர்த் தொட்டிகள், பாட்டில்கள், டயர்கள், தேங்காய் சிரட்டைகள், பானைகள் போன்றவற்றைச் சுத்தப்படுத்துவதும், வெயிலில் காய வைத்து பயன்படுத்துவதும் அவசியம். குளிர்சாதன பெட்டியை (பிரிட்ஜ்) வாரம் ஒரு முறையேனும் நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.

நோய் தொற்றிய பின் காய்ச்சல் எப்படி ஏற்படுகிறது?
நோய்க்கிருமி தொற்றியதும் அவை நிணநீர் நாளங்களில் பெருக்கம் அடையும். 4 முதல் 6 நாட்களில் அறிகுறிகளை உண்டாக்கும்.

டெங்கி காய்ச்சல்... நிலைகள், அறிகுறிகள் என்ன?
1. டெங்கி காய்ச்சல் ( Dengue Fever -DF)

2. டெங்கி ரத்தக் கசிவு காய்ச்சல் (Dengue Hemorrhagic Fever -DHF)

3. டெங்கி தீவிர தாக்குதல் நிலை (Dengue Shock Syndrome)

இவ்வாறு டெங்கி காய்ச்சலில் 3 நிலைகள் ஏற்பட்டு மரணங்களும் ஏற்படுகின்றன.
DF: கடுமையான காய்ச்சல், கடும் தலைவலி, கண்களுக்கு பின்னால் கடும் வலி (Retro Orbital Pain), தசைவலி, எலும்பு & மூட்டுவலி, கடும் வாந்தி, தோலில் சிவந்த சினைப்புகள் (Rash)
DHF: கடும் காய்ச்சல், தோலில் சிவப்பு, ஊதா நிறப் புள்ளிகள், வாய் உட்பகுதி, மூக்கு, குடற்பகுதியில ரத்தக் கசிவு, ரத்த வாந்தி, ரத்த மலம்.
DSS: நோய் உக்கிரமடைந்து ரத்த சுழற்சி செயலிழந்து விடும். இந்நிலை ஏற்பட்டு 12 – 24 மணி நேரங்களில் நோயாளி மரணமடைந்து விடுவார்.

டெங்கி காய்ச்சலை உறுதிப்படுத்த சோதனைகள் உள்ளதா?
நேரிடையாக (அ) மறைமுகமாக டெங்கி காய்ச்சலை ஆய்வுக் கூடங்களில் உறுதிப்படுத்த முடியும்.
நோயின் ஒரு கட்டத்தில் டெங்கி வைரஸ்கள் மனித ரத்தத்திலுள்ள தட்டையணுக்களை (PLATELETS) அழிக்கும். எனவே வாய், மூக்கு என உடலின் பல பாகங்களில் ரத்தக் கசிவு நிகழ்ந்து உயிரிழப்பு ஏற்படும். இந்நோயாளிகளுக்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் - மருத்துவமனைகளில் (Fresh Blood Transfusion (அ) Platelets Rich Plasma) ரத்தம் செலுத்தப்பட வேண்டியது அவசியம்.

டெங்கி காய்ச்சலுக்கு தடுப்பு மருந்துகள் உள்ளனவா?
ஆங்கில மருத்துவத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை! சித்த, ஆயுர்வேத மருந்துகள் பயனளிக்கின்றன.
நிலவேம்பு கசாயம் தினம் - காலை / மாலை 30 மிலி வெறும் வயிற்றில் 3 வாரம் தொடர்ந்து பருகினால் டெங்கி உள்ளிட்ட வைரஸில் பரவும் காய்ச்சலைத் தடுக்க முடியும்.
ஆயுர்வேதத்தில் அம்ருதாரிஷ்டம் (Amrutha Aristitam) 25 மிலி மருந்து சமஅளவு வெந்நீருடன் கலந்து காலை, மாலை பருகினால் டெங்கியை தடுக்க முடியும்.

சித்த மருந்துகளில் பிரமானந்த பைரவம், வாதசுர குடிநீர் போன்றவை டெங்கி காய்ச்சலைத் தடுக்கவும், குணப்படுத்தவும் உதவுகின்றன.

ரத்தத் தட்டணுக்கள் ( PLATELETS) குறையாமல் காக்கவும், அதனை வேகமாக அதிகரிக்கச் செய்யவும் ஆடாதோடை மூலிகை (ஆரம்ப நிலை தட்டணு குறைவு உள்ளபோது - 1 லட்சம் To 11/2 லட்சம் அளவுக்குள் இருக்கும்போது) சாற்றினை சற்று சூடாக்கி தினம் 10 மி.லி. வீதம் 1 வாரம் சாப்பிட்டால் Platelets அதிகரிப்பதைக் கண்கூடாக காணலாம். (ஆடாதோடை பச்சை இலை கிடைக்காவிட்டால்.... பொடியாக, மாத்திரையாக கிடைத்தாலும் பயன் படுத்தலாம்)

(குறிப்பு : Platelets எண்ணிக்கை மிகவும் குறைந்தால் ரத்தம் செலுத்துவது மிகவும் அவசியம்; நல்லது.)
‘டெங்கியை’ அடங்கச் செய்ய ஹோமியோபதியில் மருந்துகள் உள்ளனவா?
உலகப்புகழ் பெற்ற சுமார் 25 ஹோமியோபதி மருந்துகள் வரலாறு நெடுகிலும் டெங்கி, சிக்குன் குனியா, பன்றி காய்ச்சல், பறவை காய்ச்சல் போன்றவற்றைக் கட்டுப்படுத்துவதில் வெற்றிகரமாக பயன்பட்டுள்ளன.
 
1996-ல் டெல்லியில் டெங்கி பேரளவில் தாக்கிய போது அரசின் உத்தரவுக்கிணங்க, டெல்லி மாநில ஹோமியோபதி கவுன்சில் ‘Eupatorium Perf ’ என்ற ஹோமியோபதி மாத்திரையை பல்லாயிரம் பொதுமக்களுக்கு தடுப்பு மருந்தாக வழங்கி முழுவீச்சில் டெங்கி காய்ச்சலைக் கட்டுப்படுத்தினார்கள். மேலும் டெங்கி காய்ச்சல், ரத்த கசிவு டெங்கி இரண்டையும் (ஆங்கில மருத்துவத்தில் உரிய மருந்துகள் இல்லாத நிலையில்) ஆற்றல்மிக்க 25 ஹோமியோபதி மருந்துகள் மூலம் குணப்படுத்திக் காட்டினர்.

பொதுமக்களே! அச்சம் வேண்டாம்!
பெருவாரி நோய்கள் பரவும் காலங்களில் நம் உடலின் தற்காப்புத் திறனை மேம்படுத்திக் கொண்டு நோய் வராமல் தடுக்கவும், நோயின் ஆரம்ப நிலையிலேயே பக்கவிளைவு இல்லாமல் முழுமையாக குணப்படுத்தவும் வாய்ப்புள்ள ஹோமி யோபதி, சித்தா, ஆயுர்வேத மருந்துகளைப் பயன்படுத்துங்கள்.
 
எளிய கிருமிகளால் மனித உயிர்கள் அழிவது மாபெரும் வீழ்ச்சி! அறியாமை! இறைவன் மகத்தானவன்!
 
மனித உயிருக்கு அரணாய் திகழும் இறைவன் அருளியுள்ள மாற்று மருத்துவங்கள் இருக்க... வீண் பயமும் பீதியும் எதற்கு? இறையருளுடன் டெங்கி காய்ச்சலை முறியடிப்போம்..

No comments: