Sunday, November 11, 2012

ஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றனர்? (Part-07)


அரசுப் பணிகளில் இஸ்லாமியருக்கு உரிய பங்களிக்கப்படவில்லை என்று சொல்கிறீர்களா?
ஆம். இந்தியாவிலுள்ள மொத்த மக்கள் தொகையில் 13 சதம் முஸ்லிம்கள் உள்ளனர். ஆனால் உயர் அரசதிகாரிகள் மட்டத்தில் முஸ்லிம்கள் எந்த அளவு உள்ளனர் என்று பாருங்கள்.

அகில இந்தியா
பதவி மொத்த இஸ்லாமிய சதவீதக் ஆண்டு
எண்ணிக்கை அதிகாரிகள் கணக்கில்
இஸ்லாமியர்
அய்.ஏ.எஸ். 4195 90 2,14 1984
அய்.பி.எஸ். 2222 67 3.0 1983
மேலேயுள்ளது அகில இந்தியக் கணக்கீடு. தமிழகத்தில் நிலைமை என்ன தெரியுமா? கீழே பாருங்கள். தமிழகத்தில் முஸ்லிம் மக்கள் தொகை வீதம் 5.2%

தமிழ்நாடு
பதவி மொத்த இஸ்லாமிய சதவீதக் ஆண்டு
எண்ணிக்கை அதிகாரிகள் கணக்கில்
இஸ்லாமியர்
அய்.ஏ.எஸ். 272 3 31.10 1984
அய்.பி.எஸ். 111 3 02.7 1983

மைய அரசின் டில்லித் தலைமைச் செயலகத்தில் உள்ள நிலையைக் கீழே பாருங்கள். மொத்த சனத்தொகையில் 11.8 சதமாக உள்ள முஸ்லிம்களுக்கான பிரதிநிதித்துவம் இது 1971ம் ஆண்டு விவரம். இன்று இந்த எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளது. சச்சார் குழு அறிக்கை (2004) ஏராளமான புள்ளி விவரங்களின் அடிப்படையில் இதை நிறுவியுள்ளது.

பதவி மொத்த இஸ்லாமிய சதவீதக்
எண்ணிக்கை அதிகாரிகள் கணக்கில்
இஸ்லாமியர்
தேர்வுநிலை 140 02 1.43
அதிகாரி
முதல்நிலை 395 05 1.27
அதிகாரி
பிரிவு 1666 12 0.27
அதிகாரி
உதவியாளர் 4507 19 0.42
சுருக்கெழுத்தாளர்கள்
பதவி மொத்த இஸ்லாமிய சதவீதக் ஆண்டு
எண்ணிக்கை அதிகாரிகள் கணக்கில்
இஸ்லாமியர்
தேர்வுநிலை 130 00 0
முதல்நிலை 155 00 0
இரண்டு+மூன்றாம் 3280 08 0.24
நிலைகள்
எழுத்தர்கள்
பதவி மொத்த இஸ்லாமிய சதவீதக் ஆண்டு
எண்ணிக்கை அதிகாரிகள் கணக்கில்
இஸ்லாமியர்
மேல்நிலை 2511 09 0.36
கீழ்நிலை 6588 30 0.46
நான்காம் நிலை 5383 39 0.73
ஊழியர்கள்
தனியார் நிறுவனங்களில் நிலைமை பரவாயில்லை எனச் சொல்ல முடியுமா?
அங்கு இதைவிட மோசம்.கீழேயுள்ள 1984ஆம் ஆண்டின் புள்ளி விவரங்களைப் பாருங்களேன். எண்கள் எல்லாம் சதவீதக் கணக்கில் இஸ்லாமியரின் பங்கைக் குறிக்கின்றன.
தனியார் நிறுவனங்கள்
நிறுவனம் அதிகாரிகள் கண்காணிப்பாளர்கள் தொழிலாளர்கள்
டிஸ்கோ 4.1 5.6 10.3
டெக்ஸ்மாகோ 0 0.30 4.4
மபத்லால் 0 1.72 3.53
காலிகோ 0.68 0 10.02
மஹிந்த்ரா& 1.48 2.25 5.02
மஹிந்த்ரா
ஆர்கே 3.30 3.00 11.90
ஜேகே தொழில் 2.63 3.28 5.41
நிறுவனங்கள்
இந்தியன் 0 2.33 7.09
எக்ஸ்ப்ளோசிவ்ஸ்

மேற்குறித்த புள்ளிவிவரங்கள் எல்லாம் சிறுபான்மைக் குழு அறிக்கைளிலிருந்து தொகுக்கப்பட்டவை. எகானமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி இதழ்களிலும் (ஆண்டு மலர் 88, ஜூலை 29, 89), ஒய்.ஜி.பாக்டே எழுதியுள்ள சுதந்திரத்திற்குப் பின் இஸ்லாமியரும் தாழ்த்தப்பட்டோரும்என்ற நூலிலும் காணலாம்.

கோயமுத்தூர், அகமதாபாத், சென்னை, பம்பாய் போன்ற தொழில் நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி இங்கெல்லாம் தொழிற்சாலைகளில் பணிபுரியும் முஸ்லிம்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு குறைந்துகொண்டே வருகிறது என்பதையும் ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.
தமிழ்நாட்டில் முஸ்லிம்கள் அதிகம் பணிபுரியும் தொழில் எது தெரியுமா? வட ஆற்காடு மாவட்டத்திலுள்ள தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் முஸ்லிம்கள் அதிகம் வேலை வாய்ப்புப் பெறுகின்றனர் (32 சதம்). ஏன் தெரியுமா? இந்த வேலை மிகவும் அசுத்மான, இழிவான, ஆரோக்கியக் கேடான வேலை. பாரம்பரியமாக இழிவாகக் கருதப்படும் இவ்வேலையைத் தாழ்த்தப்பட்டவர்களும் (60 சதம்)முஸ்லிம்களுமே செய்து வந்தனர். இன்றும் கூட உயர்சாதி இந்துக்கள் இந்த வேலையைச் செய்வதில்லை. இயந்திர இயக்குநர்கள், எழுத்தர்கள் போன்ற வேலைகளில் மட்டுமே பங்கு பெறுகின்றனர். தோலை ஊறவைத்தல், மயிர் பிடுங்குதல் போன்ற வேலைகளை, முஸ்லிம்கள், தாழ்த்தப்பட்டவர் மற்றும் பெண்கள் மட்டுமே செய்கின்றனர். (பார்க்க பேரா.என்.சர்தார்கான், ‘வாணியம்பாடி தோல் தொழிலாளரின் சமூகப் பொருளாதார நிலை’ (அச்சில் வெளிவராத எம்.பி.ல ஆய்வு).
இராணுவம், காவல்துறை ஆகியவற்றில் முஸ்லிம்களுக்குஉரிய பங்களிக்கப்பட்டுள்ளதா?
இல்லை. வகுப்புக் கலவரங்களில் முஸ்லிம்கள் கொல்லப்படுவது இந்து மத வெறியர்களால் மட்டுமல்ல, இராணுவம் மற்றும் காவல்துறையால் கொல்லப்படுவதுதான் அதிகம். நீதிபதிகள் தார்குண்டே, ராஜேந்தர் சச்சார் ஆகியோர் தலைமையில் காஷ்மீரில் இராணுவக் கொடுமைகள் பற்றி ஆராய்ந்த குழு சுட்டிக்காட்டியுள்ள ஒரு சம்பவம் (31.3.90) இங்கே குறிப்பிடத்தக்கது. ஒரு ஆசிரியரின் வீட்டிற்குள் டியூசன்படித்துக் கொண்டிருந்த மாணவர்களை வரிசையாய் நிறுத்திப் பெயரைக் கேட்டு முஸ்லிம் மாணவரை மட்டும் சுட்டுக் கொன்றிருக்கிறது இந்திய இராணுவம். சர்வதேச பொதுமன்னிப்புச் சபைஎன்கிற மனித உரிமை அமைப்பு பொதுவாக அரசின் மனித உரிமை மீறல்களை மட்டுமேஆய்வு செய்யும் ஒருஅமைப்பு.. ஆனாலும் 1987ல் மீரட்டில் நடந்த வகுப்புக் கலவரத்தை அது ஆராய்ந்தது. பி.ஏ.சி. படையினர் முஸ்லிம்களை லாரியில் ஏற்றிச் சென்று 130 பேரை ஆற்றங்கரையில் நிற்க வைத்துச் சுட்டுக் கொன்று ஆற்றுக்குள் தள்ளிய கொடுமையை அது கண்டித்துள்ளது.

ஒரு கட்டிடத்தில் முப்பது முஸ்லிம்கள் உயிரோடு வைத்துக கொளுத்தப்பட்டதற்கும் பி.ஏ.சி. தான் காரணம் என அவ்வறிக்கை கண்டிக்கிறது. அடுத்த நாள் மீரட் வீதிகளில் பி.ஏ.சி. ஜிந்தாபாத்என்று ஆர்.எஸ்.எஸ்சினர் முழக்கமிட்டுக்கொண்டு ஊர்வலம் நடத்தினர். சமீபத்திய பம்பாய்க் கலவரத்தில் சிவசேனைக்குத் துணையாகக் காவல்துறை செயல்பட்டதையும், பாபர் மசூதியை வெறியர்கள் இடிக்கும் போது, பி.ஏ.சி. மற்றும் காவல்துறையில் பல்வேறு பிரிவுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றதையும் பத்திரிகைகளில் படித்தோம். 2002ல் குஜராத்தில் இரண்டாயிரம் முஸ்லிம்கள் கொல்லப்பட்ட நிகழ்வில் காவல் துறையின் ஒத்துழைப்பு ஊரறிந்த கதை. இராணுவம், காவல்துறை முதலியன இப்படி இந்துமயமாகிப் போனதற்கான காரணங்களிலொன்று இவறிறில் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படாதது. பி.ஏ.சி. படையில் 4 சதம் மத்திய ரிசர்வ் படையில் 5.5 சதம் மதக்கலவரங்களை அடக்குவதற்கான அதிரடிப்படையில் 6 சதம் மட்டுமே முஸ்லிம்கள் உள்ளனர்.

மதக் கலவரம் தொடர்பான வழக்குகளையும் போலீசார் ஒழுங்ககாப் பதிவு செய்து நடத்துவதில்லை. பிவந்தி (பம்பாய் 1984) கலவரத்தில் பதிவு செய்யப்பட்ட 611 வழக்குகளில் நான்கில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டது. குஜராத்தில் நடைபெற்றுள்ள செய்திகளைச் (2002) சொல்ல ஆரம்பித்தால் அது ஒரு தனி நூலாகவே விரியும். அங்கே இன்று நிலைமை என்னவெனில் குற்றவாளிகள் அதிகாரிகளாகவும், அமைச்சர்களாகவும் திரிகிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணமின்றித் துன்புறுகிறார்கள். இச்சூழலை உபேந்திர பக்சி போன்ற அறிஞர்கள் அரசே கிரிமினல்தன்மை அடைந்த நிலை எனக் கூறுவது குறிப்பிடத்தக்கது.
மதக் கலவரங்களில் கொல்லப்பட்ட இஸ்லாமியர் பற்றி ஏதேனும் புள்ளி விவரங்கள் உண்டா?
இத்தகைய புள்ளி விவரங்களைச் சேகரிப்பதில் ஒரு சிக்கல் இருக்கிறது. வன்முறை எப்போதும் உயிர்களையும் உடைமைகளையும் மட்டுமல்ல, சான்றுகளையும் சேர்த்தே அழித்து விடுகிறது. இத்தகைய விசயங்களில் அரசு ஆவணக் காப்பகங்களையும் முழுமையாக நம்ப முடியாது. எடுத்துக்காட்டாகப் பகல்பூர் (அக். 1989) கலவரத்தில் குறைந்தபட்சம் 1000 பேர் கொல்லப்பட்டனர். ரயிலில் பயணம் செய்தோரைக் குத்திக் கொல்வது, பாலியல் வன்முறைகள் எனப் பலவாறும் முஸ்லிம்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. கலவரத்தைத் தொடர்ந்து ஒரு இலட்சம் பேர் அகதிகள் முகாமில் இருந்தனர். ஜனவரி 90வரை 10,000 பேர் முகாமில் இருந்தனர். 1990பிப்ரவரி மாதத்தில் சண்டே மெயில்பத்திரிகை சுமார் 13 நாட்கள் அப்பகுதியில் தங்கி இக்கலவரம் பற்றி ஒரு ஆய்வு மேற்கொண்டது. ஆவணக் காப்பகத்தில் பல முக்கியச் சான்றுகள் அழிக்கப்பட்டிருந்ததை அப்பத்திரிகை வெளிப்படுத்தியுள்ளது.

கலவரத்தின்போது உடனுக்குடன் வரும் அவசரச் செய்திகளைப் பதிவு செய்த புத்தகம் உட்பட அழிக்கப்பட்டிருந்தது.தவிரவும் இத்தகைய சம்பவங்கள் குறித்து அரசுத் தரப்பு அறிக்கைகளையும், உயர்சாதியினர் ஆதிக்கம் செலுத்துகிற பத்திரிகைச் செய்திகளையும் நாம் நம்பமுடியாது. இருந்தபோதிலும் அவ்வப்போது மனித உரிமை அமைப்புகள் பல கலவரங்கள் குறித்த உண்மை விவரங்களை ஆய்வு செய்து அறிக்கைகள் வெளியிட்டுள்ளன. ஆனால் இவற்றை யாரும் முழுமையாய்த் தொகுத்து ஒட்டுமொத்தப் புள்ளி விவரம் தயாரித்துள்ளதாகத் தெரியவில்லை. இந்த உண்மைகளை மனதில் நிறுத்திக் கொண்டு கீழ்க்கண்ட புள்ளிவிவரத்தைப் பாருங்கள்.

மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழுள்ள ,காவல்துறை ஆய்வு மற்றும் வளர்ச்சி நிறுவனம்வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலிருந்து இவ் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. தகவல் இல்லை (த.இ) என்பது அரசால் தகவல் முடக்கப்பட்டுள்ளதைக் குறிக்கிறது. தகவல் முடக்கப்படாத முதலிரண்டு விவரங்களை வைத்துச் சொல்வதானால் சராசரியாக இக்கலவரங்களில் 100 பேர் கொல்லப்பட்டால் அதில் 70 பேர் முஸ்லிம்கள்தான். மொத்த சனத்தொகையில் இஸ்லாமியர் 13 சதம்தான் என்பதை மறந்துவிடாதீர்கள். இங்கொன்றைச் சொல்வது அவசியம். இது குறித்த ஆய்வுகளை மேற்கொள்வதற்கு உரிய ஆவணத் தொகுப்பு நிலையங்கள் ஏதும் இங்கு இல்லை. இது குறித்து அக்கறை உள்ளோர் இந்த விடயங்களில் முன்கை எடுத்தல் அவசியம்.

No comments: